ஜன.11ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்... விக்கிரமராஜா அறிவிப்பு!
வாடகைக் கடைகளுக்கான, வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை கண்டித்து ஜனவரி 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜனவரி 11ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 17ம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
