பக்தி உணர்வால் பரவசமடைந்தேன்... மகா கும்பமேளாவில் நீராடிய மோடி பெருமிதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இன்று பிரதமர் மோடி புனித நீராடினார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த ஆண்டு பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று பிப்ரவரி 5ம் தேதி புதன்கிழமை காலை புனித நீராடினார்.
இதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்த பிரதமர் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் கண்டுகளித்து பரவசமடைந்தார். பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 38.2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வருகையை முன்னிட்டு பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!