சென்னையில் ‘பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... 3 பேர் பலி!

 
பப்

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் இயங்கி வருகிறது ஷேக்மேட் பப் என்கிற பிரபல உயர்தர கேளிக்கை விடுதி. இங்கு தினமும் நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்கள் வந்து மது அருந்தி விட்டு கேளிக்கைகளில் ஈடுபட்டு செல்கிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ‘பப்’ உள்ளே இருந்த நிலையில், திடீரென மதுபானக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி  பரிதாபமாக 3 பேர் பலியானார்கள்.

இடிபாடுகளில்  மேலும் இருவர் சிக்கியிருந்ததாக வெளியான தகவலையடுத்து மீட்பு பணிகள் நடைப்பெற்றது. மேற்கூரை இடிந்து விழுந்ததில், தரைத்தளத்திலும் அதிர்வு ஏற்பட்டது. தரைத்தளத்தில் இருந்தவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பப்

தகவல் அறிந்து வந்த போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஓட்டல் ஊழியர்களான சென்னையைச் சேர்ந்த சைக்குளோன் ராஜ்(45), மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ்(21), லாலே(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் படையில் ஈடுபட்டனர். 

பப்

ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தற்போது மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் அதிர்வு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்தை மாநகர கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா நேரில் பார்வையிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web