காவல்துறை கழிவு வாகனங்கள் ஜூலை 2ல் பொது ஏலம்.. எப்படி பங்கேற்பது? முழு விபரம்!

 
கழிவு வாகனங்கள் ஏலம்

பயன்பாட்டிலிருந்து கழிக்கப்பட்ட தங்களின் பழைய அலுவலக வாகனங்களைப் பொது ஏலம் விடுவதாகச் சென்னை காவல்துறை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறைந்த விலையில் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு, தற்பொழுது கழிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு ரகக் காவல் வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன. எதிர்வரும் ஜூலை 2ம் தேதி  காலை 11 மணியளவில் இந்த ஏல நடைமுறைகள் தொடங்குகின்றன. சென்னை எழும்பூரில் சிபிசிஐடி வளாகத்தில் வைத்து இந்த பொது ஏலம் நேரடியாக நடத்தப்படவுள்ளது.

இந்தக் காவல்துறை வாகன ஏலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன வியாபாரிகள் என விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் நேரடியாகக் கலந்துகொண்டு ஏலம் கேட்கலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள், ஏலத் தொடக்கத்திற்கு முன்னதாகவே தங்களின் ஆதார் அட்டையின் நகலை அதிகாரிகளிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏலம் விடப்படும் வாகனங்களின் வகைகள், முன்பணம் மற்றும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 69952022860, 9962488150 ஆகிய அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.