பொதுமக்கள் கவலை... புதுக்கோட்டையில் உயர் மின்னழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்!
Sep 2, 2026, 08:25 IST
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணிய நகரில் மழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் உயர் மின்னழுத்தத்தால், பல்வேறு வீடுகளில் இருந்த விலைமதிப்பற்ற மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
மழையின் காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் உயர் மின்னழுத்தப் பாய்வு காரணமாக, 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இயங்கிக் கொண்டிருந்த டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதனப் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் நேற்று இரவே மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. இந்த உயர் மின்னழுத்தத்திற்கான சரியான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
