பொதுத்தேர்வு.. சம்மர் ஹாலிடேஸ்.. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 11 நாட்கள் வங்கி விடுமுறை... இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க!
நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்டு வரி செலுத்துவது, புது பள்ளி, கல்லூரி அட்மிஷன், சம்மர் ஹாலிடேஸ் என்று மார்ச் மாதத்தில் செலவுகளும் வரிசைக் கட்டி நிற்கிறது. இந்நிலையில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட விடுமுறை பட்டியலின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்க பணிபரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க.
வார இறுதி விடுமுறைகளும், அரசு அறிவித்த தினங்களும் இதில் அடங்கும்.பண்டிகை நாட்கள் மற்றும் மாதத்தின் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் காரணமாக இந்த விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வங்கிகள் மூடப்பட்டாலும், பணப்பறிப்பு இயந்திரங்கள் மற்றும் இணைய வழி சேவைகள் வழக்கம்போல் இயங்கும். அவசர தேவைகளுக்கு மக்கள் மின்னணு சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 8-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 14-2வது சனிக்கிழமை
மார்ச் 15-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 20 - வெள்ளிக் கிழமை - தெலுங்கு வருடப்பிறப்பு,
மார்ச் 21 - - சனிக்கிழமை -ஈகைத் திருநாள்

மார்ச் 22- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 28 - 4 வது சனிக்கிழமை
மார்ச் 29-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 31 - திங்கட்கிழமை -மகாவீர் ஜெயந்தி,
இது தவிர 1, 8, 15, 22, 29 ஞாயிற்றுக் கிழமைகள், 14, 21 சனிக்கிழமைகள் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப உங்கள் பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க.
