குன்னூரில் சுற்றித்திரியும் 2 சிறுத்தைகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை - பொதுமக்கள் அச்சம்!

 
சிறுத்தைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்தொரை மற்றும் சந்திரா காலணி பகுதிகளில் 2 சிறுத்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்து வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்துச் சிறுத்தைகளைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர்

குன்னூர் அருகேயுள்ள இளித்தொரை மற்றும் சந்திரா காலணி குடியிருப்புப் பகுதிகளில் 2 சிறுத்தைகள் பகல், இரவு எனப் பாராமல் நடமாடி வருகின்றன. அப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை அவை வேட்டையாடி வருவதாகக் கூறப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு அருகிலேயே சிறுத்தைகள் நடமாடுவதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும், வேலைகளுக்குச் செல்லவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்துத் தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 சிறுத்தை

பொதுமக்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, குன்னூர் மற்றும் கட்டபெட்டு வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்துச் சிறுத்தைகளைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.