பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

 
சென்னை மெரினா பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டத்திற்கு அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள 9 மீனவ கிராம மக்களும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள 9 மீனவ கிராமங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் அச்சம் வெளிப்படுத்தியுள்ளனர்.

தலைமை செயலகம் விஜய்

திமுக மற்றும் அதிமுக ஆகிய முந்தைய அரசுகள் இந்தப் பகுதியைத் தேர்வு செய்யாத நிலையில், தற்போதைய அரசு கள நிலவரங்களை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் பொதுநல அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.