வாய்க்காலில் பாய்ந்த கார்! எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்டபோது விபத்து... பகீர் வீடியோ!

 
வாய்க்கால்

 

 

புதுச்சேரி அருகே சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில், 4 வயது சிறுமி உட்பட 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 5 பேர், வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். திங்கள்கிழமை காலை பாகூர்–கன்னியக்கோவில் சாலையில் ஆல்பா கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட காரை ஓட்டுநர் சாலையோரமாகத் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சித்தேரி வாய்க்காலில் கவிழ்ந்தது.

காரில் இருந்தவர்கள் வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினரும் போக்குவரத்துப் போலீசாரும் கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்