தீபாவளிக்கு 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான மளிகை தொகுப்பு இலவசம்!

 
தீபாவளி

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை இலவசமாக வழங்க உள்ளது. குடும்பங்களின் பண்டிகைக் காலச் செலவைக் குறைக்கும் நோக்கில், ரூ.700 மதிப்பிலான இந்தத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு

இந்தச் சிறப்புத் தொகுப்பில் 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் 500 கிராம் மைதா ஆகியவை இடம்பெறுகின்றன. தீபாவளி பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளதால், குடும்பங்களுக்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களைத் தவிர, தகுதியுள்ள மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொருட்கள் விநியோகம் தொடங்கும் தேதி மற்றும் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களைப் புதுச்சேரி அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.