தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக ₹1,000 வங்கிக் கணக்கில் வரவு - புதுச்சேரியில் அதிரடி!

 
தீபாவளி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைக்கு பதிலாக தலா ₹1,000 நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த 1,33,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் (60,877 ஆண்கள் மற்றும் 73,013 பெண்கள்) இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மொத்தம் 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இத்திட்டத்திற்காகப் புதுச்சேரி அரசு ₹13.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தீபாவளி

இதுதவிர, புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹700 மதிப்புள்ள தீபாவளிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணிகளும் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

பணம் ரொக்கம் போனஸ் ஊக்கத்தொகை உதவித்தொகை

பண்டிகைக் காலத்தில் துணிகளுக்குப் பதிலாகப் ரொக்கப் பணமாக வங்கிக் கணக்கில் வழங்கப்படுவது பயனாளிகளுக்குத் தேவையான பொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.