புதுச்சேரியை தொடர்ந்து மதுரை? 5ம் வகுப்பு சிறுமி பலாத்காரம் செய்து கொலை?! போலீசார் விசாரணை!

 
சிறுமிக்கு பாலியல் சீண்டல்

மதுரை மாநகராட்சி கூடல்நகர் காவல் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு 6 வயதாக இருக்கும் போது அவரது தாயார் உடல் நலக்குறைவால் இறந்துவிட, தந்தை வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து விட்டு சென்று விட்டார். இவரது தம்பியும் கடந்த ஆண்டு ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் இழந்த சிறுமிக்கு அவளது பெரியம்மா அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அவர் தனது தங்கை மகளை தனது சொந்த மகளாக ஏற்றுக்கொண்டார். பெற்றோர் இல்லாத குறையை அறியாத அளவுக்கு அவரிடம் அன்பும் பாசமும் காட்டினார். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சிறுமி குளியலறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெரியம்மா கதவை பலமுறை தட்டியும் குளியலறை கதவு திறக்கப்படவில்லை.

அதன்பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சிறுமி மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட சிறுமியின் பாட்டி தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் கூடல் நகர் போலீசார் சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அதன் அடிப்படையில் சிறுமி இறந்து கிடந்த குளியலறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.அங்கு சிறுமியின் ஆடைகள் கிழிந்து கிடந்தன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web