புதுச்சேரியில் 5 மணிக்கே 88.1% வாக்குகள் பதிவு - முந்தைய சாதனைகள் முறியடித்துப் புதிய மைல்கல்!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாத வகையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள 88.1% வாக்குப்பதிவு, கடந்த 2012-ஆம் ஆண்டு பதிவான 82 சதவீதத்தை விட அதிகமாகும்.

புதுச்சேரி முழுவதும் மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலா இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து 'வெப் காஸ்டிங்' மூலம் நேரலையாகக் கண்காணிக்கப்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவு

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன், கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவைச் சீராக நடத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார். வரிசையில் காத்திருப்பவர்களுக்குக் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறையின்றி கிடைப்பதை இங்கிருந்தே உறுதி செய்தனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை தொய்வின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், இறுதி நிலவரப்படி இந்தச் சதவீதம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு கல்லூரி மாணவிகள் வோட்டு

ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் முதன்முறையாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.