பச்சிளம் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்.. இறந்த கணவருக்கு நீதி கேட்டு போராட்டம்..!!

 
தொழிலாளி நெடுஞ்செழியன் மனைவி

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் சொலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4ஆம் தேதி பாய்லர் வெடித்து 16 ஊழியர்கள் உள்பட 6 நபர்கள் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன் (34) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போலோ மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சையில் இருந்த நெடுஞ்செழியன் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் அனுமதியின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அவரது சடலத்தை கொண்டு வந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், இதனை அறிந்த பாதுகாவலர்கள் வாயிற் கதவை இழுத்து மூடினர். அப்பொழுது நெடுஞ்செழியன் மனைவி கார்த்திகா இரண்டு மாத கைக்குழந்தையுடன் கேட்டின் முன்பு அமர்ந்து கதறி அழுதார். அவருடன் பெற்றோர் கோதண்டபாணி, சாந்தா, மச்சான் குருநாத் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் உறவினர்கள் கூறுகையில், "தொழிற்சாலை விபத்து அடைந்த உடனே ஜிப்மர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றினார். அப்போலோ மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இவர்களுடைய தவறுகளை மறைப்பதற்காகவே அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நெடுஞ்செழியன் இறந்தது குறித்து எங்களுக்கு தகவலை கொடுக்கவில்லை, காவல் துறைக்கு மட்டும் தகவல் கொடுக்கப்பட்டு எங்களின் அனுமதி இல்லாமல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இந்திராகாந்தி மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு வந்துள்ளனர். காவல் துறையினர் விபத்து குறித்து எந்த தகவலும் தங்களிடம் கூறவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் அனைத்துமே மறைக்கப் பார்க்கின்றனர். பணம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது. உண்மைகள் அனைத்தும் எப்பொழுது எப்படி வெளியே வரும் என தெரியவில்லை. எங்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்ய வேண்டும். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்றனர்.

From around the web