தவெக பாடல் ஒலித்ததும் உற்சாக நடனம்! புதுக்கோட்டையில் மூதாட்டியின் வைரல் வீடியோ

 
தவெக

 

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 2) பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக விழா நடைபெறும் மைதானத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒலிபெருக்கி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைக் கேட்ட அங்கிருந்த மூதாட்டி ஒருவர் உற்சாகம் அடைந்து, விசிலடித்தபடி நடனமாடத் தொடங்கினார்.

மூதாட்டியின் உற்சாகமான நடனத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ரசித்தனர். முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடனம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்தவர்கள் அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது மூதாட்டி விசிலடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.