இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடிக்க போகாதீங்க... புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
மீனவர்கள்

 

இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இந்திய சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்த நிலையில், இலங்கை கடல் பகுதிக்குள் செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மீனவர்கள்

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இந்திய சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லக்கூடாது என்றும், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, கடல் எல்லையைத் தொடர்ந்து கண்காணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.