ரேஷன் கடைக்குள் புகுந்த 7 அடி சாரைப்பாம்பு! பார்த்து அதிர்ந்த ஊழியர்கள் !

 
பாம்பு

 

புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

நிஜாம் காலனி பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது, ஷட்டரின் இடைவெளி வழியாக சாரைப்பாம்பு ஒன்று உள்ளே சென்றிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. கடையின் ஷட்டரை திறந்து பார்த்தபோது உள்ளே பாம்பு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.கடைக்குள் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பை சாக்குப்பையில் பாதுகாப்பாக அடைத்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

ரேஷன் கடைக்குள் இவ்வளவு நீளமான பாம்பு புகுந்த தகவல் அப்பகுதியில் பரவியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கடையை திறப்பதற்கு முன்பே பாம்பு உள்ளே சென்றதாக கூறப்படும் நிலையில், ஊழியர்கள் கடையை திறந்தபோது பாம்பை பார்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.