இனி அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 /-... புதுமைப்பெண் திட்டம் நீட்டிப்பு !

 
புதுமைப்பெண்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிப்பதை உறுதி செய்யும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டது அந்த வகையில் இவர்களுக்கு மாதம் ரூ1000  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
 புதுமைப்பெண்

இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு பள்ளிகளில் படித்து வரும்  2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனை மேலும் விரிவு படுத்தும் வகையில் இத்திட்டம்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

புதுமைப்பெண்
 இது குறித்த அரசாணையை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 49,664 மாணவிகள் கூடுதலாக பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவியர்களின் பெற்றோரிடையே பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web