BREAKING... விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் இரங்கல் பதிவை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக எம்எல்ஏ புகழேந்தி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது மகன் புகழ் செல்வக்குமாருக்கு உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!