சில்க் ஸ்மிதாவின் பிணத்தை கூட விட்டுவைக்கல.. புலியூர் சரோஜா பகீர் தகவல்!

 
சில்க்

தமிழ் திரையுலகில் கவர்ச்சி மற்றும் கனவுக் கன்னியாக ரசிர்களால் கொண்டாடப்பட்டவர்  சில்க் ஸ்மிதா . இவர் மறைந்து  28 ஆண்டுகள் ஓடி விட்டன.  ஆனாலும் அவரது மறைவு குறித்த மர்மம் விலகவே இல்லை. இவர் மிகச்சில ஆண்டுகளே திரைத்துறையில் இருந்தார். ஆனால் அவர் இருந்த காலத்தில் அவருக்கு இணை யாரும் இல்லை என்ற அளவுக்கு இருந்தார். ஆந்திராவில் பிறந்த சில்க்கின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவருக்கு மிகச்சிறு வயதிலேயே திருமணம், தொடர்ந்து மணமுறிவு ஏற்பட்டு விட்ட நிலையில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.    

சில்க்

வீட்டில் வீட்டு வேலை பார்த்து கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவை   இயக்குனர் விணு சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் படத்தில் சாராய வியாபாரியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் அவரின்  பெயர் சில்க். பின்னர் தனது பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்டார்.  தனது முதல் கேரக்டரான சில்க் என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார்.  டஸ்கி நிறம், சொக்க வைக்கும் கண்கள், கொஞ்சி பேசும் பேச்சு என  மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை தொட்டார். அவரின் ஒரே ஒரு பாட்டு மட்டும் இருந்தாலே படம் ஹிட் என்ற காலங்கள் தமிழ் சினிமாவில் இருந்தன.   சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்க்கு தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலங்கள் உண்டு. மிக மிகக்  குறுகிய காலத்திலேயே 400க்கும் மேற்பட்ட படங்களில் சில்க் ஸ்மிதா நடித்தார்.
 
ஆனால் சில்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது.   புகழின் உச்சியில் இருந்த போதே சில்க் 1996 செப்டம்பர் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சில்க் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. யாராவது கொலை செய்திருக்கலாம் என  அவரின் உறவினர்கள், நண்பர்கள்  குற்றம் சாட்டினர்.   
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்படும் பிரபல நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா சில்க் குறித்து கூறியவை தற்போது மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளன.   “சில்க் தன்னிடம் வந்து, நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்  , கல்யாணத்தை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டும் ” எனக் கூறியிருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஒரு வாரத்திலேயே சில்க் இறந்து விட்டதார்.

சில்க்

அத்துடன்  “ சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரிந்த உடனே,  .. உடனடியாக அவரின் உடலை பார்க்க சென்றோம்..  அவளின் உடலை பார்க்கவே முடியாத அளவுக்கு பெரும் கஷ்டம். உயிரற்ற உடலில் எங்கேயும் ஆடைகள் இல்லை.  அவர் இறந்த பின்பும் அங்கேயும் சில்க்கிற்கு கொடுமை இழைக்கப்பட்டு இருந்தது பார்த்தாலே தெரிந்தது. அதன் பிறகு தொடர்ந்து 10 நாட்கள் நான் தூங்கவே இல்லை.   அவளை யார் எது செய்திருந்தாலும் அவர்கள் நல்லாவே இருக்கமாட்டார்கள்” எனக் கூறியிருந்தார்.  
சில்க் ஸ்மிதா இறந்த சமயத்தில் அவர் மரணத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அவை வெளியில் வராத வண்ணம்  முக்கிய அரசியல் புள்ளிகள். உச்சத்தில் இருந்த திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.  அத்துடன் சில்க்கின் உயிரிழந்த   உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பிணவறை ஊழியர்கள்   அவரின் உடலை  பாலியல் வன்கொடுமை செய்தததாகவும் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து பல நாட்கள் இந்த கொடுமை அரங்கேறியதாகவும் அன்றைய காலகட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.   சில்க்கின் நெருங்கிய தோழிகளான புலியூர் சரோஜா,  அனுராதாவும் இதே தகவலை கூறியுள்ளனர். இத்தகவல்கள் தற்போது பரவி பெரும் வைரலாகி வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்