மறுமணம் செய்துக்கோங்க... கணவருக்கு கடிதம் எழுதி 6 வயது மகனுடன் மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை !

 
உயிரிழப்பு

 

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே தாய் மற்றும் அவரது 6 வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயதான ஏக்தா பங்காட் தனது மகன் மாதவுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ஏக்தா நீண்டகாலமாக முதுகுத்தண்டு தொடர்பான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவர் 7 முதல் 8 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது மறைவுக்குப் பிறகு கணவர் மறுமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மனைவி

இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகன் இருவரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.