புனேவில் 23 கி.மீ. பிங்க் மெட்ரோ வழித்தடம் தொடக்கம்: முழுக்க பெண்களே இயக்கும் சிறப்பு!

 
பிங்க்

 

மகாராஷ்டிரா மாநிலத்தின் நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், புனே நகரில் ரூ.8,300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் லைன் மெட்ரோ திட்டம் இன்று (நவம்பர் 3) தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

புனே மெட்ரோவின் 3-வது வழித்தடமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிங்க் லைன், சுமார் 23 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஹிஞ்சவாடி தகவல் தொழில்நுட்ப மையத்தையும் சிவாஜி நகரையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாக, பிங்க் லைனில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை முழுமையாகப் பெண்களே இயக்க உள்ளனர். ரயில் இயக்கம் உள்ளிட்ட பணிகளில் பெண்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களின் திறமையையும் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

PM Modi Highlights Pune Metro Pink Line's Women-Led Operations And Green Features

புனேவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையத்தையும் நகரின் பிற பகுதிகளையும் இணைக்கும் இந்த மெட்ரோ வழித்தடம், பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.