கோர்ட்டு அருகே பயங்கரம்: கொலை வழக்கு குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு... துண்டான கை... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
pune

 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிவாஜிநகர் கோர்ட்டு அருகே கொலை வழக்கு குற்றவாளி மீது மர்மக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. சுபம் சவான் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மண்டர் கிவாலிக்கு அண்மையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீன் நடைமுறைகளை முடிப்பதற்காக இன்று சிவாஜிநகர் கோர்ட்டுக்கு அவர் சென்றபோது, கோர்ட்டு வளாகம் அருகே உள்ள சாலையில் பைக்குகளில் வேகமாக வந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் அந்தக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் கிவாலியின் கை துண்டானது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த மண்டர் கிவாலியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.