புனே கோயிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பகீர் வீடியோ!

 
புனே

 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கோயிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோயிலில் இருந்த சிறுமியிடம் பாதுகாவலராகப் பணியாற்றிய விஷால் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங்கைக் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது