கலப்பட உணவு விற்பனை.. ஆறு மாதங்கள் சிறை.. 25,000 அபராதம்.. மத்திய அரசுக்கு பரிந்துரை..!!

கலப்பட உணவு மற்றும் பானங்கள் விற்போருக்கு, குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறை மற்றும், 25,000 ரூபாய் அபராதம் விதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்து உள்ளது.
தற்போது அமலில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் உருவாக்கும் மசோதா, லோக்சபாவில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, குற்றவியல் நடைமுறை சட்டம், பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா என்றும், இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய் சன்ஹிதா என்றும், இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சாக் ஷயா அதிநியம் என பெயர் மாற்றப்படுகின்றன. அபராதம்இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் குழு சமீபத்தில் ஆய்வு செய்து, தன் அறிக்கையை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. பார்லிமென்ட் குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது: கலப்பட உணவு மற்றும் பானங்கள் விற்கப்படுவதால், பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தற்போது அதிகபட்சம், ஆறு மாதங்கள் சிறை மற்றும்1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, இதை குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறை, குறைந்தபட்சம், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். பாரதிய நியாய சன்ஹிதாவில், வரவேற்கக் கூடிய மிகப் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, தண்டனைக்கு பதிலாக, சமூக சேவை செய்யும் பணி ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகச் சிறந்த சீர்திருத்த முயற்சி. இதன் வாயிலாக குற்றத்தில் ஈடுபடுவோர் மனம்திருந்த வாய்ப்பு தரப்படுகிறது.மேலும், சிறைகளில் ஏற்கனவே போதிய இடவசதி இல்லாத நிலையில், அங்கு அதிகளவில் அடைக்கப்படுவதை தடுக்க முடியும். வாய்ப்புஇந்த சமூக சேவை பணிகள் ஓதுக்குவது மற்றும் அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாரதிய நியாய் சன்ஹிதாவில் சில எழுத்து பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் உள்ளன. இவை அந்த சட்டப் பிரிவை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால், இந்த பிழைகளை திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.