பஞ்சாப்பில் சிக்கிய இஸ்ரேல் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல்... போலீசார் பரபரப்பு தகவல்கள் !

 
துப்பாக்கி

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு நவீன உஸி ரக துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள் மற்றும் 34 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமிர்தசரஸ் மாவட்ட கிராமப்புற போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், 26 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளில் செயல்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர்கள் சட்டவிரோத ஆயுதங்களைப் பெற்று, அவற்றை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு விநியோகிக்க உதவியதாகக் கூறப்படுகிறது.

Punjab: Afghan, juvenile among 7 of cross-border module held; 5kg heroin, firearms seized | Hindustan Times

இந்த நடவடிக்கையின் மூலம் துப்பாக்கிச் சூடு தொடர்பான மூன்று சம்பவங்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமிர்தசரஸில் உள்ள ஐந்து காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தல் வலையமைப்பின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது