பஞ்சாபில் திடீரென இடிந்து விழுந்த பாலம்! இடிபாடுகளில் சிக்கிய 2 லாரிகள்... பகீர் வீடியோ!
Nov 19, 2026, 11:55 IST
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே பக்ரா கால்வாய் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், இரண்டு லாரிகள் இடிபாடுகளில் சிக்கின.
பாட்டியாலா - சங்ரூர் பைபாஸ் சாலையில் உள்ள இந்தப் பாலம் இன்று (நவ.19) அதிகாலை 5.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தைக் கடந்து சென்ற இரண்டு லாரிகளும் இடிபாடுகளில் சிக்கின. இதில் ஒரு லாரியில் தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய இரு லாரி ஓட்டுநர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
