புரட்டாசி முடிஞ்சிடுச்சு... அதிகாலையிலேயே அலைமோதிய அசைவப் பிரியர்களின் கூட்டம்!

 
மீன் காசிமேடு

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் முக்கிய மீன் சந்தைகளில் மீன்களை வாங்குவதற்காக அசைவப் பிரியர்கள் பெருமளவில் குவிந்தனர்.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விரதமிருந்து அசைவ உணவைத் தவிர்ப்பது வழக்கமாகும். இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு முக்கிய மீன் சந்தைகளிலும் அதிகாலை 4 மணி முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.

மீன் மீன்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தன. வஞ்சிரம், சங்கரா, பாறை, வவ்வால் மற்றும் இறால் உள்ளிட்ட மீன் வகைகளுக்குக் கடும் தேவை காணப்பட்டதால், வழக்கத்தை விட மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.