புரட்டாசி ஞாயிறு.. தமிழகம் முழுவதும் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்!

 
மீன் கடை மார்க்கெட் அசைவம்

நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் வழக்கத்தை விட வெறிச்சோடி காணப்பட்டன.  ஆன்மிக சிறப்புமிக்க புரட்டாசி மாதம் துவங்கியுள்ள நிலையில், இம்மாதத்தில் பெருமாள் வழிபாட்டிற்காகப் பலரும் அசைவ உணவைத் தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம்.

கொரோனா காலத்தில் கூட ஊரடங்கு உத்தரவையும் மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு வாங்க காசிமேடு, தூத்துக்குடி திரோஸ்புரம் என்று மீன் மார்க்கெட்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டும், கறி கடைகளும்  கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

தூத்துக்குடி மீன்கள் இறைச்சி

அந்த வகையில், புரட்டாசியின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்களில் பெரும்பாலானோர் சைவ உணவைத் தேர்ந்தெடுத்ததால், கோழி மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகளில் வழக்கமான கூட்டமின்றி வெறிச்சோடிய சூழல் நிலவியது.

பாகிஸ்தான் ஆட்டிறைச்சி இறைச்சி கடை அசைவம்

இறைச்சி விற்பனை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் வழக்கம் போல் வியாபாரமின்றி மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினர்.