புஷ்பா 2 புதிய போஸ்டர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

 
புஷ்பா2

 2021ல் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் அடிப்படையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது.இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதி அளித்துள்ளது.  இந்நிலையில் படத்தில் டீஸர் குறித்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

புஷ்பா2

 ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  'புஷ்பா: தி ரூல்' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் . மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா  ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

புஷ்பா2


நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ம்தேதி  பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தனர். இது குறித்த போஸ்டரும் வைரலானது.  பான்-இந்திய படமான இப்படத்தை  வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளன.  நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.   'புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் அவரது பிறந்தநாளில் மிரட்டலாக   வெளியிடப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web