புஷ்பா 2 மாஸ் போஸ்டர் வெளியீடு!
2021-ல் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
Team #Pushpa2TheRule wishes the stellar actor #FahadhFaasil a very Happy Birthday ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) August 8, 2024
Bhanwar Singh Shekhawat IPS will be back with a bang on the big screens 💥💥#Pushpa2TheRule Grand release worldwide on 6th DEC 2024.
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP… pic.twitter.com/NGHNaMZ7EW
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடும் ஃபஹத் பாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஃபஹத் பாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாக்கியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.முன்னதாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இருந்து அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
