புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்...6 காவலர்கள் இடைநீக்கம்!

 
புகழ்

புழல் மத்திய சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறப்படும் 6 சிறைக் காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புழல் சிறையில் இருந்து நேபாளத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதி ஒருவர் அக்டோபர் 20-ம் தேதி மாயமானார். இதற்கிடையே, போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற சுரேஷ் (41) என்பவரும் அக்டோபர் 21-ம் தேதி சிறைக்கு வெளியே உள்ள அங்காடியில் பணியில் இருந்தபோது தப்பிச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் சிறை பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. தப்பிய கைதிகளைப் பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த கைதி பிடிபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பாக சிறைத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.