போக்குவரத்து போலீசாருடன் இளம்பெண்கள் வாக்குவாதம் மற்றும் மிரட்டல்!
Aug 24, 2026, 21:05 IST
சென்னை புழல் அருகே சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சில இளம்பெண்கள், அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துப் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த இளம்பெண்கள் போலீசாரிடம் ஆபாசமான முறையில் பேசி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், "எங்க ஏரியாவா இருந்தா இங்க சீனே வேற" எனக் கூறி அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான அதிருப்திகரமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன.
