ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் - 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!
Oct 8, 2026, 16:30 IST
பின்லாந்தில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, கனடாவின் வென் யு ஜாங் உடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எதிராளியை எளிதில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டியை வெறும் 28 நிமிடங்களிலேயே சிந்து வெற்றிகரமாக நிறைவு செய்தார். தொடரின் அடுத்த சுற்றில் ஜப்பானின் ரிகோ குன்ஜி என்பவரை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
