உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அயர்லாந்து வீராங்கனையுடன் மோதும் பி.வி.சிந்து!

 
உலக பேட்மிண்டன் இறுதி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து!

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான குலுக்கல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் ஒற்றைய முதல் சுற்றில் அயர்லாந்தின் சோபியா நோபிளை (உலகத் தரவரிசையில் 141-வது இடம்) இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொள்கிறார்.

உன்னதி ஹூடா தனது முதல் சுற்றில் மியான்மரின் தெட் ஹிதர் துஜாருடன் களம் காண்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் ஆஸ்திரியாவின் காலின்ஸ் வாலென்டின் பிலி மோனுடன் முதல் சுற்றில் மோதவுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அசத்தும் இந்தியா! பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி!

ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றிலேயே உலகின் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷியுகியை எதிர்கொள்கிறார்.

இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஆண்கள் இரட்டையர் பிரிவில் 'பை' சலுகை பெற்று நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகின்றனர். திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் பெண்கள் இரட்டையரில் ஸ்பெயினின் பாலா லோப்ஸ் - லூசியா ரோட்ரிக்ஸ் ஜோடியைச் சந்திக்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி

2009-க்குப் பிறகு இந்தியாவில் இப்போட்டி நடைபெறுவதால், அரங்கைப் புதுப்பிக்கச் சுமார் ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளதாக இந்திய பேட்மிண்டன் சங்கச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய பலமாக இருக்கும். பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி உட்பட இந்திய வீரர்களுக்கு இம்முறை பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது" என பயிற்சியாளர் கோபிசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.