மனைவியுடன் தகராறு... மகளை ஆற்றில் வீசிய கொடூரத் தந்தை!

 
மனைவியுடன் தகராறு மகளை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஒரு வயது பெண் குழந்தையைச் செல்ஃபி எடுப்பது போல் நடித்து ஆற்றில் வீசிய தந்தையைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரிங்கு என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ரிங்கு, மனைவியுடன் யமுனை ஆற்றின் கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தனது 1 வயது பெண் குழந்தையுடன் செல்ஃபி எடுப்பது போல் நடித்து, எதிர்பாராத விதமாகக் குழந்தையை ஆற்று வெள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார்.

குழந்தையை வீசிய கையோடு தனது மனைவியையும் ஆற்றில் தள்ளிவிட முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தித் தர்மஅடி கொடுத்துப் பிடித்து வைத்தனர்.

பிடிபட்ட ரிங்குவை பொதுமக்கள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 1 வயது குழந்தையைத் தீயணைப்புத் துறையினர் மீட்புப் படகுகள் மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.