காலாண்டு விடுமுறை நிறைவு... தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு - 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கல்!

 
அரசுப் பள்ளி தமிழகம் மாணவி

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நிறைவடைந்த நிலையில், கல்வித்துறை அறிவிப்புகளின்படி இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 25 அன்று நிறைவடைந்தன. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை அளிக்கப்பட்ட 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தேவையான 2-ம் பருவப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

மாணவிகள் விடுமுறை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதால், அத்தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும், தனியார் பள்ளிகளுக்கு நாளை அக்டோபர் 6ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பள்ளிகள் மட்டும் அக்டோபர் 7 அன்று திறக்கப்படும்.