5 வயது மகளை கொலை செய்து போலீசை அழைத்த தாய்... நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளைக் கொன்றுவிட்டதாக அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபபியானா கபெல்லோ என்ற சிறுமியின் தாயார் பிரான்சிஸ் கபெல்லோ (32), சம்பவத்தன்று அவசர உதவி எண்ணை அழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், படுக்கையறையில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில், மூச்சுத்திணறல் உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து தாயார் பிரான்சிஸ் கபெல்லோவை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
