சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின்.. இளம் நியூசிலாந்து வீரர் சாதனை ..!!

 
ரச்சின் ரவீந்திரா

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா 42 ரன்கள் சேர்த்ததன் மூலமாக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகள் சாதனை ச்யை முறியடித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகர்கள். அதனால் ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பையில்  8 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ரச்சின் ரவீந்திரா 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 523 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அறிமுகமான முதல் உலகக்கோப்பை தொடரிலேயே நியூசிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த வயசுல இவ்ளோ ரன்னா? சச்சின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா!

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் முதல் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 565 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 25 வயதிற்குள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்கள் விளாசி இருந்தார். அதனை ரச்சின் ரவீந்திரா முறியடித்தார்.

Rachin Ravindra breaks Sachin Tendulkars Record of Highest Run Scorer before turning 25 in icc 50 over world cup

அதேபோல் அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 11 இன்னிங்ஸ்களில் 532 ரன்கள் சேர்த்தார். இதனையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்துள்ளார். இதனால் வில்லியம்சனுக்கு பின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக ரச்சின் உருவெடுத்துள்ளதாக பாராட்டப்பட்டு வருகிறது.
 

From around the web