யமுனையை நீர்நிலையா பாக்காதீங்க.. உசிரா பாருங்க... ராகுல் காந்தி வேண்டுகோள்!

 
ராகுல் காந்தி


 இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று  யமுனை. இன்று இந்த ஆறு மிக மிக மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது, குறிப்பாக டெல்லி, அக்ரா போன்ற நகரங்களில் ஆற்றில் கழிவுகள் கலந்து வருகின்றன  என்ற தகவலும்  வெளியாகி வருகிறது.அதில் தான் தொழில்துறை கழிவுகள், வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை ஆற்றின் தரத்தை மோசமாக்கி விட்டன.

ஆறுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பல பகுதிகளில், நீர் கறுப்பாக மாறி, மாசுபாட்டின் தீவிரம் கண்கூடாக தெரிகிறது.யமுனை ஆற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்  அவை சரியான முறையில் செயல்படவில்லை என்பதே நிலைமை.  இதற்கு உடனடியாக  ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

யமுனை நதி
அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க தனது சமூக வலைத்தள பக்கங்களில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” யமுனை ஆற்றை வெறும் நீர்நிலையாக பார்க்காமல் அதை ஒரு உயிராக பார்க்க வேண்டும். அரசு இதை அதன் போக்கில் விட்டுவிட்டால், அதன் நிலையை மாற்ற நாம் ஒன்றாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நதியை சுத்தம் செய்ய உங்களிடம் ஆலோசனை இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web