“ரா...ரா... சரசுக்கு ரா...ரா...” அத்தனையும் 20 வயசு பொண்ணுங்க... நெடுஞ்சாலைகளில் ஆசைக்காட்டி.. வழிப்பறியில் ஈடுபட்ட 32 இளம்பெண்கள்!

 
இளம்பெண்கள்

குற்றவாளிகளை நெருங்க நெருங்க போலீசார் அதிர்ந்தனர். அத்தனை 20 வயசு இளம்பெண்கள். சொல்லி வைத்தாற் போல அத்தனை அழகு. வெவ்வெறு நாடுகளில் இருந்தும் கூட சட்டவிரோதமாக இந்தியா வந்து, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சமீப காலமாக வழிப்பறி குற்றங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் இது குறித்த அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசாரை அதிர வைக்கும் தகவலாய், தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளம்பெண்கள் என்பது தெரிய வந்தது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பக்வாரா பகுதியில் இரவில் சில  டிப் டாப் உடையணிந்த இளம்பெண்கள், அந்த வழியே தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர்.

பியாஸ் நகரில் வசித்து வரும் வரீந்தர் சிங்  இரவில் செல்லும் போது, அவரிடம் சில இளம்பெண்கள்  வழிப்பறியில் ஈடுபட்டனர். இதே போல் சத்னம்புரா பகபகுதியில் அரவிந்தர் குமார் என்ற ஷபிக்கும் நெடுஞ்சாலையில் வழிப்பறிக்கு உள்ளாகி இருக்கிறார். இவர்கள் அனைவருமே, இளம்பெண்கள் தங்களிடம் வழிப்பறி செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தனர்.  

பாலியல்
இது குறித்து  அவர்கள் இருவரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், பக்வாரா நகரில் ஜி.டி. சாலையில் இரவில் தனியாக செல்ல கூடிய ஆண்களை தான் இந்த இளம்பெண்கள் குறி வைத்து வழிப்பறி செய்துள்ளனர். முதலில் இவர்களை இளம்பெண்கள் சிலர், ஆசைகாட்டி தனியாக அழைத்து செல்வர்.  தனியாக சிக்கியதும் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்.  

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போது  ஜலந்தர்மாவட்டத்தில் இருந்து கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களை எடுத்து கொண்டு இளம்பெண்கள் இந்த பகுதிக்கு வந்தனர். அவர்களில் சிலர் 20 வயதுடையவர்கள்.  இதனை யாராவது பார்த்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பொய்யான வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம் வழிப்பறி செய்யாமல் அனுப்பி விடுவது வழக்கம் என்கின்றனர்.  புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

கத்தியை காட்டி மிரட்டல்

அவர்கள் யாரும் கல்லூரி மாணவிகள் இல்லை. அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என போலீசார் தெரிவித்தனர். அவர்களில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா  நாடுகளை சேர்ந்தவர்கள் . இதற்கு முன்பு, நைஜீரியா, தாய்லாந்து மற்றும் கானா நாடுகளில் வசித்து வரும் 14 பேர் உட்பட 32 பேரை பக்வாரா போலீசார் கைது செய்தனர்.  

இந்த மாத தொடக்கத்தில், பக்வாரா நகரின் மஹிரு கிராமத்தில் இரவில் உணவு விடுதியருகே சென்ற தொழிலதிபரை இதுபோன்று கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்கள் சிலர் திருட்டில் ஈடுபட்டனர். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வழக்கில், உகாண்டா மற்றும் தான்சானியா நாடுகளை சேர்ந்த பெண்கள் அதிகம் எனத் தெரிய வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web