2026 ராகு கேது பெயர்ச்சி - இந்த ராசிக்காரர்களுக்கு இனி உச்சம் தான்... வாழ்க்கையையே மாற்றப் போகும் அதிர்ஷ்ட யோகம்!

 
ராகு கேது பெயர்ச்சி

ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 5ம் தேதியன்று நிகழவுள்ள ராகு மற்றும் கேதுவின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வாழ்வியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் இந்தச் சஞ்சாரம், மனிதர்களின் சிந்தனைப் போக்கு, ஆன்மீக ஈடுபாடு, தொழில் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை வழங்கும்.

கிரகங்களின் புதிய சஞ்சாரப் பாதை:

இந்தப் பெயர்ச்சியின் போது, ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி சனி பகவானின் சொந்த வீடான மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். அதேபோல், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து விலகி சந்திரனின் வீடான கடக ராசிக்குள் நுழைகிறார். அடுத்த பதினெட்டு மாதங்களுக்கு இதே ராசிகளில் இந்தக் கிரகங்கள் பயணம் செய்யவுள்ளன.

ராகு கேது பெயர்ச்சி பகவான் ஜோதிடம்

மேஷம் ராசிக்காரர்களுக்குப் பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் இடமாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான அங்கீகாரம் படிப்படியாகக் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் ராகு அமைவதால், நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் உருவாகும். தந்தையுடனான உறவில் சிறிய அளவில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு எண்காமிடத்தில் (அஷ்டம ராகு) ராகு வருவதால், எதிலும் கூடுதல் விழிப்புணர்வும் கவனமும் தேவைப்படுகிறது. பணப் பரிமாற்றங்கள் மற்றும் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் ராகுவும், ஜென்ம ராசியில் கேதுவும் சஞ்சரிப்பதால், வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது அவசியமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகு அமர்வது சிறப்பான பலன்களைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும், நீண்டகாலக் கடன் பிரச்சனைகள் சுமுகமாக முடிவுக்கு வரும்.

ராகு புதன்

கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் ராகு வருவதால், பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியும், ஆன்மீகச் சிந்தனைகளில் ஈடுபாடும் அதிகரிக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பதால், வீடு, வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். பழைய கடன்கள் அடைபடும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், தைரியமும் தன்னம்பிக்கையும் பன்மடங்கு உயரும். எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் ராகு வருவதால், பேச்சில் கூடுதல் நிதானம் தேவை. குடும்ப விவகாரங்களில் வார்த்தைகளைத் கவனமாகக் கையாள்வது நன்தைத் தரும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால், புதிய முடிவுகளை எடுக்கும் போது முன்னெச்சரிக்கை அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். அதேசமயம் எதிர்ப்புகள் அகன்று மன அமைதி பிறக்கும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், எதிர்பாராத தனவரவும், பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.