ராகு நட்சத்திர பெயர்ச்சி... நாளை முதல் இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாறுது... இனி பொற்காலம் தான்!
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், அதிர்ஷ்டம் மற்றும் திடீர் மாற்றங்களைத் தரும் கிரகமாகவும் ராகு பகவான் போற்றப்படுகிறார். ராகு பகவான் ஒன்றரை ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாறினாலும், இடையில் நிகழும் அவருடைய நட்சத்திரப் பெயர்ச்சியும் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், ஆகஸ்ட் 2-ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இதனால் பெரும் யோகத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் பெறவுள்ள 3 ராசிகள் எது எது என பார்க்கலாம்.
ராகு பகவான் சதயத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு நாளை பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் சதயம் நட்சத்திரத்தில் இருக்கிறார். இதன் காரணமாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய 3 ராசிகாரர்களின் தலைவிதியே மாறுகிறது. இனி யோக காலம் துவங்குகிறது.

1. மேஷம்
ராகுவின் அவிட்டம் நட்சத்திரச் சஞ்சாரத்தால் மனதிடமும், துணிச்சலும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் பிறக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும், மேலதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும்.
2. கன்னி
பண வரவு தடையின்றி இருக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் அல்லது ஆபரணங்கள் வாங்கும் யோகம் பிரகாசமாக உள்ளது. நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். வேலையில் உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரமும், புதிய பொறுப்புகளும் தேடிவரும். நல்ல செய்திகள் வந்து சேரும்.

3. தனுசு
உங்கள் கடின உழைப்பிற்கான பூரண மதிப்பும், மரியாதையும் சமூகத்திலும் பணியிடத்திலும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களைச் சீரமைக்கும் யோகம் உண்டாகும். நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். புதிய சிந்தனைகளும், அனுபவப் பக்குவமும் மேலோங்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், செல்வாக்கும் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
