பரபரப்பு வீடியோ... ராகுல் டிராவிட் கார் விபத்து... நடுரோட்டில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதம் !

 
ராகுல் டிராவிட்

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். விஅர்  பெங்களூருவில் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் வீரர்களில் பொதுவாக  ராகுல் டிராவிட் எவ்வளவு கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொண்டதே இல்லை.  களத்தில் அமைதியாக காணப்படுவார்.  நிஜ வாழ்க்கையிலும் ராகுல் டிராவிட் ஒரு ஜென்டில்மேன் தான் என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் வாழ்ந்து காட்டியுள்ளார் .

பல ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் செய்ய வந்த பெண் ஒருவர் ராகுல் டிராவிட்டிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நிலையில் ராகுல் டிராவிட்  அந்த பெண்ணை கடுமையாக கண்டித்தார். கடைசியில் தான் அது பிராங்க் என தெரிய வந்தது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக  சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில் ராகுல் டிராவிட் பெங்களூருவில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர் ஒருவர் காரை இடித்ததாகவும், இதனால் கடுப்பான ராகுல் டிராவிட் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.  ராகுல் டிராவிட் இப்படி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார் என  அங்கு இருந்தவர்களும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு சிலர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களால் ராகுல் டிராவிட்டுக்கு கூட பாதுகாப்பு இல்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு  வருகின்றனர்.

 

ராகுல் டிராவிட்
மேலும் சிலர் இது விளம்பரமாக கூட இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இப்படித்தான் ராகுல் டிராவிட் கார்னில் ஏறி நின்று கத்தி கொண்டு இருக்கும் ஒரு காட்சி வைரலான நிலையில்  கடைசியின் அது விளம்பரம் என தெரிய வந்தது. ஆனால் இது உண்மையான விபத்தாக தான் இருக்கலாம் என தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக  இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web