ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்!

 
ஈவிகேஎஸ் ராகுல்

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இவர் உடல் நலக்குறைவு காரணமாக  சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்  ”முன்னாள் மத்திய அமைச்சர்,  டி.என்.பி.சி.சி. முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர், அவர் காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு உறுதியான நடுநிலையாளராக இருந்தார். தமிழ்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சேவை என்றென்றும் உத்வேகமாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!