Breaking... ராகுல் காந்தி கான்வாய் வாகனங்கள் மோதல்... அதிர்ச்சி வீடியோ!

 
ராகுல்

 

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின. லக்னோவில் இருந்து சுல்தான்பூருக்குச் சென்றபோது, ஹலியாபூர் அருகே பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.  

ராகுல் காந்தியின் அணிவகுப்பில் சென்ற பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ராகுல் காந்திக்கு காயம் ஏற்படவில்லை; அவர் பாதுகாப்பாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுல்தான்பூரில் உள்ள சிறப்பு எம்.பி.-எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.