பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராகுல் காந்தி!

 
மோடிஅமித்ஷாராகுல்

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் நடைமுறைகள் விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் மற்றும் விடுத்த கோரிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தல் ஆணையத்தில் மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி ராகுல்

இந்த ஒட்டுமொத்த முறைகேடுகள் மற்றும் சதித்திட்டத்தின் உச்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதைக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டுச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்திற்குச் இழைக்கப்பட்ட துரோகம் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.