சர்ச்சை வீடியோ... நாய் பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்த ராகுல் காந்தி... !

 
ராகுல்

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சார வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.   அந்த வகையில்  ராகுல் காந்தி  பாரத் ஜோடோ நியா யாத்திரையை தொடங்கியுள்ளார்.   மணிப்பூரில் தொடங்கிய இந்த   யாத்திரையில்  அது மும்பையில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 இந்த யாத்திரையில் நடுவில்  ஒரு இடத்தில் ராகுல்காந்தி நாய்க்கு ஒரு பிஸ்கெட்டை கொடுக்கிறார். அதனை நாய் ஏற்க மறுத்ததும் அருகில் உள்ள தொண்டருக்கு கொடுக்கின்றார். இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


 ராகுல் காந்தியின் யாத்திரை மார்ச் 20ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.  மொத்தம் 66 நாட்களில் சுமார் 6700 கிலோ மீட்டர் தொலைவை ராகுல் காந்தி இந்த யாத்திரையில் கடந்துள்ளார்.   2022ல்   காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அவர் இதே போல பாரத் ஜோடா யாத்திரையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் அவருடைய கார்கள் கண்ணாடி உடைந்து   போக்குவரத்து நெரிசல்   என அடுத்தடுத்த சர்ச்சைகள் ஏற்பட்டன.  அந்த வகையில் தற்போது பாஜக  அமித் மால்வியா என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டு ராகுல் காந்தி ஒரு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.   இந்த யாத்திரை  ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ராஞ்சியில் நடைபெற்றது.  ராகுல் காந்தி தன்னுடைய காரின் மேல் புறத்தில் அமர்ந்திருந்தார். அவருடன்  ஒரு சிறு நாயும்  இருந்தது, யாத்திரையின் போது அந்த நாய்க்கு அவ்வப்போது ராகுல் காந்தி பிஸ்கட்டுகளை வழங்கினார். 

ராகுல் காந்தி


 தற்பொழுது பாஜகவின் ஐடி வின் பொறுப்பாளர்  சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே   தனது கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார், இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்நிலையில், இப்பொழுது ராகுல் காந்தி தனது தொண்டர் ஒருவருக்கு நாய் பிஸ்கட்டை வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த பிஸ்கட்டை தனது நாய் சாப்பிட மறுத்த நிலையில் அதனை அங்கு இருந்த தொண்டருக்கு கொடுத்துவிட்டார்.  கட்சியின் தலைவர்   தங்கள் கட்சியினரை நாய் போல் நடத்தினால் கட்சி விரைவில் மாயமாகிவிடும் எனவும்   தனது பதிவில் கூறியுள்ளார்.

From around the web