'சத்தியாகிரஹா' தளம் அறிமுகம் - பொதுமக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள ராகுல் காந்தி தொடக்கம்!
Oct 3, 2026, 20:30 IST
பொதுமக்கள் தங்கள் ஊர்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை எளிய முறையில் நேரடியாகப் பதிவு செய்யும் வகையில் 'சத்தியாகிரகம்' என்ற புதிய பிரத்யேக இணையதளத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராட்டம் நடத்த இனி டெல்லி வரை நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள பொதுமக்கள் இந்த இணையதளம் வாயிலாகத் தங்களின் குறைகளையும் பிரச்னைகளையும் நேரடியாகத் தெரிவித்துத் தீர்வு காண முடியும். பொதுமக்களின் குரலை அரசு நிர்வாகத்திற்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் இந்த டிஜிட்டல் முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
