டெல்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் ராகுல் காந்தி - முதல்வர் விஜய்யுடன் மதிய விருந்து!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குத் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெற உள்ள ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருகிறார்.

சென்னை வரும் ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து மதிய உணவு அருந்தவுள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குப் பிறகு, முதல்வர் விஜய்யை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசுவது அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது மாநில அரசியல் நிலவரங்கள், எதிர்காலத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கல்வி முறைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ராகுல் காந்தி நேரில் உரையாடி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார்.
